கொழும்புவில் இன்று வெளிநாட்டு செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, அவர்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க இந்தியா ஒப்புக் கொண்டால் தாம் அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாக கூறினார்.
இந்தியா செல்ல வேண்டும் என்று பிரபாகரனின் தாயார் பார்வதி பிள்ளை விருப்பம் எதுவும் தெரிவிக்கவில்லை என்ற போதிலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரை தனது வீட்டில் வைத்து பராமரிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை இறந்ததைத் தொடர்ந்து பிரபாகரனின் தாயார் மற்றும் மாமியார் தனியாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வேலுபிள்ளை உடலுக்கு இலங்கை அரசு உரிய மரியாதை அளித்தது என்றும், அவரது இறுதிச் சடங்கில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்றும் ராஜபக்சே கூறினார்.



0 Responses to தேசியத் தலைவர் பிரபாகரனின் தாய் இந்தியா செல்லலாம்: ராஜபக்சே