![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwEseci7FAfLr53nD3UWEqiX8uxiVSd38TwuN0r9Igepug0lSUj_EVKBBbA5Ncr8Z7VZilTqr5yNETOI2epWadWIgQvKbSpttu4kM-zIkqezoJN8Czs73Aw7PqRzoVLuFGf1CmfD4Abfsq/s200/mahinda_rajapaksa.jpg)
இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ் அசய்திச் சேவை மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் சரத் பொன்சேகாவை விட மகிந்த ராஜபக்ச 12 சதவீதம் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்று தெரியவந்துள்ளது.
இலங்கையில் வாழும் சுமார் 10,000 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மகிந்த ராஜபக்சவின் பரப்புரை நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் இந்திய நிபுணர்கள் குழுவிற்கும் குறிப்பிட்ட ஊடக நிறுவனத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக இந்திய பரப்புரை நிபுணர்களே இவ்வாறான கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 Responses to ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவார் என இந்திய ஊடகம் தகவல்!