Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவில் மஹாராஜா நிறுவனத்திற்கு சொந்தமான சிரச மற்றும் எம்.டி.வி. தொலைக்காட்சி நிறுவனங்களின், கொழும்பு பிரேபுரூக் வீதியில் அமைந்துள்ள தலைமையகத்தின் மீது இன்று பிற்பகல் 3.45 மணியளவில் குழு ஒன்றினால் கல்லெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது, தலைமையகத்தின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. அத்துடன் வாகனங்களும் சேதமடைந்துள்ளன. தலைமையகத்திற்கு அருகில் வந்த சுமார் 100 பேர் வரை இந்த தாக்குதலை மேற்கொண்டனர். எனினும் காவல்துறையினர் உடனடியாக அந்தப்பிரதேசத்திற்கு வரவில்லை. இந்தநிலையில் தலைமையகத்தில் இருந்தோர் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக தாக்குதல் நடத்தியோர் எறிந்த கற்களைக்கொண்டு தாக்குதல் நடத்தியோர் மீது திருப்பித் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்தே கொம்பனித்தெரு காவல்துறையினர் ஸ்தலத்திற்கு வந்து தாக்குதல் நடத்தியவர்களை கலைத்துள்ளனர். அத்துடன் தாக்குதல் நடத்திய சுமார் 16 பேரையும் அவர்கள் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேவின் சில்வா, சிரச ஊடக நிறுவனத்திற்கு எதிராகவும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் தாக்குதல்களை நடத்தியமையை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.


0 Responses to பிரபல சிரச, எம்.ரி.வி தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது தாக்குதல்: 16 பேர் கைது ( காணொளி, படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com