பொன்சேகாவை கைதுசெய்த நடவடிக்கையை தலைமையேற்று செயற்பட்ட மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி திடீரென வெளிநாடு சென்றுள்ளார்.சரத் பொன்சேகாவின் கைது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறும் தேவையிருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில் மானவடு இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார்.
சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக மானவடுவை தவிர ஏனைய அனைத்து இராணுவ அதிகாரிகளிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக பதவி வகித்த காலத்தில் மேஜர் ஜெனரல் மானவடு பொன்சேகாவினால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



0 Responses to பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!