கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடாவிட்டால், இந்தியா வரும் ரஷ்ய அதிபரை
முற்றுகையிடுவோம் என்று கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான
போராட்டக் காரர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
நேற்று தமிழக சட்டப் பேரவையை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, பாமக, மதிமுக உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கட்சி, மற்றும் அமைப்புக்களை சேர்ந்த பலரும் கைது செய்யப் பட்டனர். இந்நிலையில் கூடங்குளத்தில் உதயகுமார் தலைமையில், சென்னை வரமுடியாதவர்கள் கடலில் இறங்கி, தண்ணீருக்குள் நின்று போராட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய உதயகுமார், "தமிழக அரசு மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசாமல் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவேண்டும். எங்கள் போராட்டத்தில் ஒட்டு மொத்த தமிழக மக்களும் பங்கெடுத்து உள்ளனர். அனைத்து மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, நாட்டில் சமாதானம் நிலவ அணுமின் நிலையத்தை உடனடியாக மூடவேண்டும். அப்படி மூடாவிட்டால், டிசம்பர் மாதம் டெல்லி வரும் ரஷ்ய அதிபரை முற்றுகையிடுவோம்" என்று கூறியுள்ளார்

0 Responses to இந்தியா வரும் ரஷ்ய அதிபரை முற்றுகையிடுவோம்: கூடங்குளம் போராட்டக்காரர்கள்!