பாஜக தலைவர் நிதின் கட்கரி மீது ஊழல் குற்றசாட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதனால் பாரதீய ஜனதா கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியின் தலைவருமான நிதின் கட்கரியின் மேல் ஊழல் புகார்கள் அடுக்கடுக்காக வந்த வண்ணம் உள்ளது. 1999ஆம் ஆண்டு மகாராஷ்டிர முதல்வராக இருந்த போது, 165 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு தனியார் நிறுவனத்துக்கு சாலைகள் அமைக்க முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளார் என்றும், அந்த பணத்தைக் கணக்கு காண்பிக்க கார் ஓட்டுனர் உட்பட பல நபர்களின் பெயர்களில் மொத்தம் 16 தொழில் நிறுவனங்கள் தொடங்கியுள்ளார் என்றும் நிதின் கட்கரி மீது புகார் வரத் தொடங்கியுள்ளது.
இந்த தகவல் கிடைத்தவுடன் கம்பெனிகளுக்கான மத்திய விவகாரத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நிதின் கட்கரி கட்சி தலைமைப் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராம்ஜெத் மலானி கூறியுள்ளார்.

0 Responses to பாஜக தலைவர் நிதின் கட்கரி மேல் குவியும் ஊழல் புகார்கள்: கட்சிக்குள் சலசலப்பு!