சரத் பொன்சேகாவுக்கு அரசாங் கம் இழைத்துள்ள அநீதி காரணமாக மக்கள் ஜனநாயக தேசிய கூட்டணிக்கு வழங்கிவரும் ஆதரவைக் கண்டு அஞ்சும் அரசாங்கம் அந்தக் கட்சியை அடக்க முயற்சிப்பதாகப் புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகளின் தலைவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் அரசாங்கம் நாட்டு மக்களுக்குச் சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுத்த இராணுவத் தலைவரைச் சிறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு இந்த அரசாங்கம் இழைத்த அநீதிக்கு எதிராகத் தமது கடமையை நிறைவேற்ற நாட்டு மக்கள் தயாராகியுள்ளனர். விடுதலைப்புலிகளின் கே.பி. எங்கே? அவருக்கு எதிராக வழக்கும் இல்லை. ஒன்றுமில்லை.
இந்தப் புலிகளின் தலைவருக்குச் சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் அரசாங்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவைத் தடுத்து வைத்து வழக்குத் தாக்கல் செய்துள்ளது. வெளியில் இருக்க வேண்டியவர்கள் உள்ளேயிருக்கின்றனர். ஜனநாயக தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை நசுக்குவதற் காகவே அதன் தலைவர்களை இரகசியப் பொலிஸார் பின்தொடர்கின்றனர் எனவும் மனமேந்திர குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to விடுதலைப்புலிகளுக்கு சொகுசு வாழ்க்கை பொன்சேகாவுக்கு சிறை