தென்மேற்கு லண்டனிலுள்ள லாங்பிறாங் பாடசாலை அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கீழ்ப்பிரிவாகவும், மேற்பிரிவாகவும் போட்டிகள் வழமைபோன்று இடம்பெற்றிருந்தன.
மங்கள விளக்கேற்றல், அகவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில் முதலில் கீழ்ப்பிரிவுப் போட்டியும், பின்னர் மேற்பிரிவுக்கான போட்டிகளும் இடம்பெற்றதுடன், இடையே அந்த அமைப்பின் பொறுப்பாளர் மருத்துவர் என்.எஸ்.மூர்த்தியின் சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது.
நிகழ்வின் நடுவர்களாக இசையாசிரியை யசோதா மித்திரதாஸ், இசைச் சகோதரிகள் துசி, தனு ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.
புலம்பெயர்ந்துள்ள தமிழீழ இளையோர் மத்தியில் தாயக உணர்வூட்டும் வகையில் "வெண்புறா" அமைப்பு "தாயகக்காற்று" நிகழ்ச்சி போன்று, நர்த்தனமாலை என்ற தாயப்பாடல்களுக்கான நடனப்போட்டி, விளையாட்டுப் போட்டி, சின்னப்புற்றாக்கள் என்ற சிறுவர்களுக்கான பேச்சு, கவிதைப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது.
தாயகத்தில் சிறீலங்கா அரசின் பாரிய இன அழிப்பின் விளைவாக ஏற்பட்ட மனிதப்பேரழிவு காரணமாக கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு வெற்றி பெற்றோர் விபரங்கள்:-
கீழ்ப்பிரிவு பெண்கள்:
1) தமிழினி மேனன்
2) அக்சன்யா அருந்தவராஜா
3) புகழினி மேனன்
கீழ்ப்பிரிவு ஆண்கள்:
1) றீகன் செல்லையா குகதாஸ்
2) மெளனிகன் கணேசலிங்கம்
3) ஜொயான்ஸ் அலோசியஸ்
மேற்பிரிவு பெண்கள்:
1) ஜோவிற்றா சேவியர்
2) நிலானி இராமச்சந்திரன்
3) மிருதங்கா உதயராஜன்
மேற்பிரிவு ஆண்கள்:
1) சிங்கம் அருணாசலம்
2) துரைசாமி தயாசீலன்
3) அருமைநாயகம் சிவகுமார்.






0 Responses to வெண்புறாவின் "தாயகக்காற்று" நிகழ்ச்சி நான்காவது ஆண்டாக நடைபெற்றது (படங்கள்)