2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போதும் பிரச்சாரம் செய்யவென முயன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை நாரந்தனைப் பகுதியில் வைத்து ஈ.பி.டி.பி இனர் தாக்கினர். இதில் இரண்டு த.தே.கூ ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர், த.தே.கூ வேட்பாளர்கள் உட்பட பலர் காயங்களுக்கு உள்ளாகினர். இதேபோன்ற நிலமையே இப்போதும் தீவுப்பகுதிகளில் காணப்படுவதாகவும், சுதந்திரமான பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் வேட்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசியல் கட்சி வேட்பாளர்களின் ஒன்று அல்லது இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே தீவுப்பகுதிக்குச் சென்றனர். ஆனால் அவர்களின் வாகனங்களை ஈ.பி.டி.பி இனர் தடுத்து நிறுத்தியதோடு தமது ஒலிபெருக்கிகளில் ஈ.பி.டி.பி பாடல்களைக் கதறவிட்டதால் பிற கட்சிகளின் பிரச்சாரம் அமிழ்ந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது. பிற கட்சிகள் ஒட்டிய சுவரொட்டிகளையும் கூட ஒட்டிய சிறுது நேரத்திலேயே ஈ.பி.டி.பி இனர் கிழித்து எறிந்துள்ளனர்.
தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற பயத்தில் பிற கட்சி வேட்பாளர்கள் அங்கு செல்லப் பின்னடிப்பதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன. இதுவரை த.தே.கூ அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தீவுப்பகுதிக்குச் செல்லவில்லை.



0 Responses to தீவுப் பகுதிகளில் பிற கட்சிகள் நுழைவதைத் தடுக்கும் ஈ.பி.டி.பி