முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவிடம் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் தனது கணவர் பொன்சேகா நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா தமக்கு குளிரூட்டப்பட்ட அறை வேண்டும் என கோரியிருப்பதாகவும், சரத் பொன்சேகா குண்டு காயங்களுக்கு இலக்காகி, தற்போது நுரையீரல் பாதிப்புக்குள்ளாகியதாகவும், தற்போதும் குண்டுத் துகள்கள் சரத் பொன்சேகாவின் நுரையீரலில் இருப்பதாகவும், எனவே சரத் பொன்சேகாவுக்கு குளிரூட்டப்பட்ட அறையே தேவைப்படுவதாக தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள கைதிகளிலேயே குளிரூட்டப்பட்ட அறையை கோரிய ஒரே கைதி எனது கணவர் தான் எனவும், பொன்சேகா மட்டுமே தமது நுரையீரலில் குண்டுத் துகல்களை சுமக்கின்ற ஒரே கைதி எனவும், இதனால் மற்ற கைதிகளுக்கு சமமாக இவரை பார்க்க முடியாது என அனோமா தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என குற்றம் சாட்டினார். சரத் பொன்சேகாவை அவர்களின் உறவினர்களும் பார்க்க முடியும் என நீதிமன்றம் அனுமதித்துள்ள போதும், உயர்மட்ட அதிகாரிகளின் உத்தரவுக்கு அமைய தன்னை மாத்திரமே அவர்கள் சந்திக்க அனுமதிப்பதாக அனோமா தெரிவித்துள்ளார்.



0 Responses to பொன்சேகாவின் நுரையீரலில் குண்டுத் துகள்கள்