Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரத்பொன்சேகா அவர்கள் சனல்-4 தொலைக்காட்சிக்கு விசேட செவ்வி ஒன்றை சிறையில் இருந்தவாறே வழங்கியுள்ளார். இதைனை இவர் னைபட எழுதி தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ளார்.

இவர் மீது இரு குற்றச்சாட்டுகள் முன்வைத்து வழக்கு விசாரணை செய்யப்பட்டுள்ளது. ஒன்று இராணுவத்தில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டது. மற்றயது தனது மருமகனிற்று ஆயுதம் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கியது.

சரத்பொன்சேகா ஐனாதிபதி தேர்தலில் 1.8 மில்லியன் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட போதும் அவர் கைப்பட எழுதிய செவ்வியில் மகிந்த தனது வாக்குகளை திருடி வெற்றி ஈட்டியபோதும் தானே அதிக வாக்குகளை பெற்றவன் என்hதால் என்மீது பொறாமை கொண்டுள்ளார். அதுமட்டும் அல்லாமல் என்னை சட்டத்திற்கு முரணாக தடுத்துவைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனானும் தான் ஒருபோதும் இக்கொடுமையான ஏமாற்றுகார ஐனாதிபதியை நாட்டின் நன்மைகருதி வெளிப்படுத்துவதை கைவிடமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஐனாதிபதி தேர்தலில் வெற்றியை திருடியதை மக்கள் உணர்வார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது நடவடிக்கைகள் இடியமீன் போல் இருப்பதாகவும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவிக்கையில் ஐனாதிபதியின் நட்பு இல்லாமல் இவ் யுத்தத்தை வெற்றிபெற்றிருக்க முடியாது எனத்தெரிவித்துள்ளார்.

தனது கணவர் அரசுக்கு எதிராக சதிசெய்தார் என்பது பொய்யான குற்றச்சாட்டு எனவும் தற்போது தனது கணவரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடற்படைத் தலைமையகத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின் வரைபடம் இதுவாகும். சரத் பொன்சேகா சொகுசு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவருகின்ற வேளையில், உண்மையில் தமக்கு .சி வசதிகூட இல்லாத, அதோடு அங்குள்ள ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டுள்ள அறையே தரப்பட்டுள்ளதாக சரத் சனல் 4 க்குக் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஜனாதிபதி இடி அமீன் போலவே நடந்து வருகிறார்: பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com