ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரான பான் கீ மூன் தன்னால் சிறிலங்கா விடயம் தொடர்பில் ஆலோசனை வழங்கவென அமைக்கப்படவிருந்த நிபுணர்கள் குழு திட்டமிட்டபடி அமைக்கப்படும் எனவும் அணிசேரா அமைப்புக்கள் அதனை தவறாக விளங்கிக்கொண்டன எனவும் தெரிவித்துள்ளார். அதுபற்றிய விளக்கத்தை தான் நேரடியாக வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இவ்வாறு ஒரு நாட்டுக்குரிய விடயங்களில் தலையீடு செய்வது போன்றவகையில் நிபுணர்கள் குழு அமைக்கப்படுவதை கண்டித்த சிறிலங்கா அரசும் அணி சேரா நாடுகளின் அமைப்பும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் தவறாக செயற்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தனர். அவ்வாறான முடிவு தமது இறைமையை பாதிக்கும் எனவும் மகிந்த ராஜபக்சவும் கூறியிருந்தார்.
இதேவேளை சிறிலங்கா விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ முனுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் இடை யில் பேச்சுவார்த்தை இடம் பெற்றுள்ளது. இதன்போது சிறிலங்கா மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசனை வழங்கும் நிபு ணர் குழுவின் நியமனம் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனும் மனித உரிமைப் பேரவையின் ஆலோசனையாளர் நவநீதம்பிள்ளையும் பேச்சு நடத்தியுள்ளனர்.
உத்தேசிக்கப்பட்ட நிபுணர்கள் குழு இதுவரையில் பெயரிடப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் பலரிட மும் பான் கீ மூன் ஆலோசனை பெற்று வரு கிறார். இதன் ஒரு பகுதியாக நவநீதம்பிள்ளை யுடன் அவர் பேசியுள்ளார். இதைவிட முக்கியஸ்தர்கள் பலரிடமும் பான் கீ மூன் கலந்தாலோசித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை சிறிலங்காவில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் அதுகுறித்து ஆராய குழு வொன்றை நியமிக்க மேற்கொள்ளும் முயற்சியானது சிறிலங்கா சம்பந்தமாக மேற்கொள் ளப்படும் தேவையற்ற தலையீடு என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதம வேட் பாளர்களில் ஒருவரான அமைச்சர் டி.எம்.ஜய ரத்ன தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஐ.நா. செயலாளர் அல்ல அதனைவிட பெரிய தலைவர்கள் எதனைக் கூறினாலும் எமது அரச தலைவர் நிலைகுலையும் தலைவரல்ல.பான் கீ மூன் எப்படி நாட்டின் பிரச்சினைகளில் தலையீடுகளை மேற்கொள்ள முடியும்? உலகில் 66 நாடுகளில் பயங்கரவாதம் இருக்கிறது. இவற்றில் மிகப்பெரிய நாடுகளும் உள்ளன.
எனினும் எந்த நாட்டிலும் பயங்கரவாதத்தை முடிபுக்குக் கொண்டுவர முடியவில்லை. திடீரென பான் கீ மூனிற்கு சிறிலங்காவின் மனித உரிமை குறித்து ஞாபகம் வந்துள்ளது. நாட்டில் குண்டுகள் வெடிக்கும்போது பாட சாலைகள், மசூதிகள், கோயில்கள் மீது குண் டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போது ஐக்கிய நாடு கள் அமைப்பு அதனை கண்டுகொள்ளவில்லை.
தற்போது இவர்கள் நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ள முயற்சிக்கின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவரது உரையை கேட்டவர்களுக்கு குழப்பமான நிலைமை ஏற்பட்டது. யாகப்பர் தேவாலயம் நவாலி தேவாலயம் நாகர் கோவில் பாடசாலை புதுக்குடியிருப்பு வைத்தியசாலை என குண்டுபோட்டு அழிக்கப்பட்டதை சொல்கிறாரா அல்லது கண்டி தலதா மாளிகை மீது நடத்தப்பட்ட குண்டுதாக்குதலை சொல்கிறாரா என குழப்பம் அடைந்தனர்.
பான் கீ மூனால் அமைக்கப்படவிருந்த குழுவானது அணி சேரா நாடுகளின் எதிர்ப்பால் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அக்குழு சம்பந்தமாக தாம் உறுதியாக இருப்பதாகவும் அணி சேரா நாடுகளுக்கு நேரடியாக அதுபற்றி விளக்கமளிப்பேன் என்றும் பான் கீ மூன் கூறியுள்ளமை சிறிலங்கா அரச தரப்புக்கு கவலையை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.



0 Responses to சிறிலங்காவின் கூற்றை நிராகரிப்பு - குழு அமைக்க போவதாக பான் கி மூன் உறுதி