Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். குடாநாட்டில் இருவர் காணாமல் போனமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இவ்வாறான சம்பவங்கள் நின்றுவிட்டமையும் மீண்டும் இப்போது இவ்வாறான சம்பவங்கள் நிகழதொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி தெரியவருவதாவது:

யாழ்ப்பாணம் சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய மாணவனான 17 வயதான சிவஞானம் சஜீபன் கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவருடைய தாயாரான கமலாதேவி முறைப்பாடு செய்துள்ளார்.

பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்தபின்னர் புதிய கல்விநிலைய வகுப்புக்கு போவதாக கூறிசென்றவர் அதன் பின் வீடுதிரும்பவில்லை என தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இவரின் குடும்பம் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அண்மையிலேயே மீள்குடியேற்ற செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஊர்காவற்றுறை நாரந்தனை பிரதேசத்தின் வியாபாரியான 34 வயதான டொன் பொஸ்கோ ரொனாலட் சிலாத் என்ற குடும்பஸ்தரை கடந்த 15 ஆம் திகதி முதல் காணவில்லை என முறையிடப்பட்டுள்ளது.

இவர் வியாபார நோக்கத்திற்காக யாழ்ப்பாணம் வந்தநிலையிலேயே காணாமல் போயுள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to யாழில் இருவரை காணவில்லை- மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com