இப்போட்டியில் பேச்சு போட்டிகளும், பொது அறிவுப்போட்டிகளும் நடைபெறவுள்ளன. 14 வயதிற்குட்பட்ட இளையவர்களுக்காக நடைபெறவுள்ள இப்போட்டிகளில், பேச்சுப்போட்டிகள் பொது அறிவு போட்டிகள் ஆகியன நடைபெறவுள்ளன. இவை பற்றிய விபரங்களை தமிழ் பாடசாலைகள் ஊடாக அனுப்புவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்த்திறன் போட்டிகள் இளையவர்களின் தமிழ் மொழித்தேர்ச்சியையும் தமிழ் மொழியிலான பொதுஅறிவையும் ஊக்குவித்து வளர்க்கும் நோக்கோடு தமிழ்த்திறன் போட்டிகள் நடைபெறவுள்ளன.
தமிழ் இளையோர் அமைப்பினால் நடத்தப்படவுள்ள இப்போட்டியில் பங்குபற்ற விரும்புவோர், tyo.vic.australia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஏப்ரல் 18ம் திகதிக்கு முன்னதாக உங்கள் விபரங்களை அனுப்பிவைக்கவும். பேச்சுப்போட்டி 14 வயதிற்குட்பட்ட இளையவர்களுக்காக நடத்தப்படவுள்ளன. இப்போட்டி 3 பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது. 1. 6 வயதிற்குட்பட்டோர் 2.7- 10 வயதிற்குட்பட்டோர் 3. 11 - 14 வயதிற்குட்பட்டோர்
1. பேச்சுக்குத் தெரிவுசெய்யப்படும் விடயங்கள்.
அவுஸ்திரேலியாவில் தமிழர்களின் பங்களிப்புகள் அவுஸ்திரேலிய வரலாறு தாயக மக்களுக்கான புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புகள் எனது எதிர்காலம்
2. பேச்சுக்கள் 3 - 5 நிமிடங்களுக்குள் நிறைவு செய்யப்படுவதாக இருக்கவேண்டும்.
3. பேச்சாளர் தான் தெரிவுசெய்த தலைப்பில் பொதுவான விளக்கத்தைக் கொண்டவராக இருக்கவேண்டும். பேச்சாளர் உரிய விளக்கத்தைக் கொண்டிருக்கிறார் என்பதைஉறுதிப்படுத்துவதற்கான வினாக்கள் கேட்கப்படலாம்.
பொதுஅறிவுப் போட்டி
இப்போட்டியில் 14 வயதுக்குட்பட்ட அனைவரும் பங்குபற்றலாம். இப்போட்டியானது குழு ரீதியான போட்டியாகும். 4 பேர் கொண்ட குழுக்களாக இப் போட்டியில் பங்குபற்றலாம். தமிழ்ப்பாடசாலைகளிலிருந்து குழுக்களாகப் பங்குகொள்ளலாம் அல்லது தனியாகவும் குழுக்களை உருவாக்கியும் பங்குகொள்ளலாம்.
போட்டியில் முதலாவதாக, குழு ரீதியான பொது அறிவு மற்றும் தமிழ்த்திறன் சம்பந்தமான எழுத்துப் பரீட்சை நடைபெறும். இப்பரீட்சையில் ஒரேநேரத்தில் அனைத்துக் குழுக்களுக்கும் வழங்கப்படும் பொதுவான வினாக்கொத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
இவ்வினாக்கொத்துக்கான விடைகள் மதிப்பீடு செய்யப்பட்டு முன்னனியில் உள்ள 3 குழுக்கள் தெரிவு செய்யப்படும். இவ்வாறு எழுத்துப் பரீட்சையில் தெரிவு செய்யப்படும் கூடிய புள்ளிகளைப் பெற்ற மூன்று குழுக்களுக் கிடையில் இறுதிப்போட்டி நடைபெறும். இறுதிப்போட்டிகள் நாட்டுப்பற்றாளர் நினைவு நிகழ்வில் மேடை நிகழ்வாக நடத்தப்படும்.
மேலதிக தொடர்புகளுக்கு: ஜனனி 0432 382 248.



0 Responses to விக்ரோரிய மாநிலத்திற்கான நாட்டுப்பற்றாளர் நாள் நினைவு நிகழ்வுகள்: போட்டி விபரங்கள்