கிருசாந்தி சக்திதாசன் (சாலினி) அவர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். எந்தவொரு கட்சியும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குக்களைப் பெற்று வெற்றிபெறாத காரணத்தால் இதன் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த இறுதி வாக்கெடுப்புத் தேர்தலில் சோசலிசக் கட்சி, பசுமைக் கட்சி, இடதுசாரி முன்னணிக் கட்சி ஆகியன இணைந்து HUCHON 2010 - LA GAUCHE ET LES ECOLOGISTES RASSEMBLES POUR L'ILE-DE-FRANCE (LUG) என்ற முன்னணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இதன் வேட்பாளர்களில் ஒருவராக செல்வி கிருசாந்தி சக்திதாசன் (சாலினி) அவர்களும் போட்டியிடுகின்றார்.
பிரான்ஸ் நாட்டில் முதன் முறையாக ஈழத் தமிழர் ஒருவருக்கு இத்தகைய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழீழ மக்களது அவலங்களின் சாட்சியாக பிரான்சில் போர்க் கொடியுயர்த்தி, பொதுத் தளத்திலும், அரசியல் தளத்திலும், ஊடகத் தளத்திலும் ஓயாமல் போராடிவரும் செல்வி சாலினியை அறியாதவர்கள் பிரான்சில் இருக்க முடியாது. நேர்மையும், கொள்கைப்பற்றும், தமிழ்த் தேசிய தாகமும் கொண்ட இவர் பிரான்சின் தமிழர்கள் அதிகமாக வாழும் பிரதேச சபையான சென் சென்ற் டெனிசில் வெற்றி பெற்றுத் தெரிவானால், அது ஈழத் தமிழர்களுக்குப் பெருமை மட்டுமல்ல, தமிழீழத்தை நோக்கிய எமது அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்குக் கிடைக்கும் பெரும் அங்கீகாரமாகவும் அமையும்.
புலம்பெயர் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், பிரான்சில் வாழும் தமது உறவுகளுடன் தொடர்பு கொண்டு, இந்தப் பிரதேசபைத் தேர்தலில் செல்வி சாலினி வெற்றிபெற ஊக்குவிக்குமாறும், பிரான்சில் வாழும் தமிழ் உறவுகள் இந்த அரிய அரசியல் வாய்ப்பை நழுவ விடாது செல்வி சாலினியின் வெற்றிக்காக முடிந்த பங்களிப்பைச் செலுத்துமாறும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.



0 Responses to இதுவும் எமக்கான தேசியக் கடமைதான்!