புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எம்முடன் நாடு கடந்த தமிழீழ அரசு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் நாம் அதற்கு முக்கியத்துவம் வழங்குவோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.புலம்பெயர்ந்த மக்கள் தனித்தாயகம் அமைப்பது குறித்துப்பேசுவது ஜனநாயகத்தின் அடிப்படையிலானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாங்கள் உருவாக்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கட்சி யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் போட்டியிடுவதாகவும் கூறினார்.
ஏனைய கட்சிகளைப்போல் இல்லாமல் அண்மைக்காலம்வரை,தமிழ் தேசியக்கூட்டமைப்பு எமது அடிப்படை கொள்கைகளுடன் இணைந்து போனதால்தான் எம்மால் கூட்டமைப்பின் சம பங்காளியாக இருக்க முடிந்தது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
எத்தனை ஆசனங்களை எதிர்ப்பார்ர்க்கின்றீர்கள் என கேட்டபோது எத்தனை ஆசனங்கள் என்பதைவிட, தாங்கள் வெற்றிபெறுவோம் என்று அவர் குறிப்பிட்டார்.
டெய்லிமிரர்



0 Responses to நாடு கடந்த தமிழீழ அரசு குறித்துப் பேசத் தயார்: கஜேந்திரகுமார்