Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் எனக் கூறிக்கொண்டு அரசாங்கத்திடம் சரணடைந்த கே.பி. என்ற குமரன் பத்மநாதன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ராஜபக்ஸ அரசாங்கத்தை வெற்றியடையச் செய்வதற்காக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக நம்பத்தகுந்தத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், வடக்கு கிழக்கில் அரசாங்கத்தின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரிப்பது அவரது ஆரம்பப்பணியாக அமைந்திருந்தது. வடக்கு கிழக்கில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் கே.பி.யினால் தெரிவுசெய்யப்பட்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.

இலங்கையிலிருந்து பிரித்தானியாவிலுள்ள தனக்கு நெருக்கமான சிலருடன் தொலைபேசியில் அண்மையில் தொடர்புகொண்டுள்ள கே.பி. தன்னைத் தவறாக உணர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை விடுவிப்பதும், இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவதே தனது நோக்கம் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் ராஜபக்ஸ சகோதரர்களுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபடுவதும் தனது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தன்னை நன்கு பராமரித்துவருவதாகவும் தான் மிகவும் ஆடம்பரமான இடத்தில் சகல வசதிகளுடன் இருப்பதாகவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் வெளியில் செல்ல சொகுசு வாகனமும் பாதுகாப்பும் தன்வசம் இருப்பதாகவும் முன்னரைவிட அச்சமின்றி தான் வசிப்பதாகவும் கே.பி. கூறியுள்ளார்.

0 Responses to தேர்தல் பணிகளில் கே.பி. மும்முரமாக ஈடுபட்டுள்ளார்: சிங்கள இணையம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com