தமிழ் ஈழத்தின் களம் இன்னும் அழிந்துவிடவில்லை என்று வைகோ பேசினார்.திருவெறும்பூர் அருகேயுள்ள நாவல்பட்டில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ,ஈழ தமிழர்கள் படும் இன்னல்களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து போராடியவர்கள் நாங்கள்.நடித்து வென்றவர்கள் வேறு சிலர்.இதனால் தமிழ் ஈழத்தின் களம் என்பது இன்னும் அழிந்துவிடவில்லை.மீண்டும் பிரபாகரன் நம் முன் தோன்றுவார். களத்தை வழி நடத்தி செல்வார்.
அந்த நேரத்தில் முன்பு இருந்ததை விட லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். முத்துக்குமார் ஏற்றி வைத்த தீபம் இன்னும் அழிந்து விடவில்லை.அந்த தீபத்தை ஏந்திக்கொண்டு உலகம் எங்கும் உள்ள பல லட்சம் தமிழர்கள் மீண்டும் ஒரு களத்தை காண தயாராக இருக்கிறார்கள்.
களங்கள் வந்துகொண்டே தான் இருக்கும். களத்தில் இருப்பவர்கள் உடனே வெற்றியை எதிர்பார்க்க முடியாது. விடுதலைக்காக கட்டபொம்மன், வாஞ்சிநாதன், பகவத்சிங் நேதாஜி, திலகர் ஆகியோர் போராடினார்கள்.
ஆனால் அவர்கள் காலத்தில் சுதந்திரத்தை பார்க்கவில்லை. அதை நாம் பார்த்தோம். அவர்கள் நின்ற களத்தில் நின்று வென்ற நாம் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறோம். அதுபோலதான் ம.தி.மு.க.வும் களங்கள் பல கண்டு உள்ளது.
பல வெற்றி, தோல்விகளை பெற்று உள்ளோம். நிரந்தர வெற்றியை நிச்சயம் ஒருநாள் பெற்று தீருவோம். அன்று தனி ஈழமும் மலரும். மறுமலர்ச்சியும் மலரும் என்றார்.



0 Responses to மீண்டும் பிரபாகரன் நம் முன் தோன்றுவார். களத்தை வழி நடத்தி செல்வார்: வைகோ