Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாய் நாட்டில் உறவினர்கள் யாரும் இல்லாததால் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கனடாவில் வசிக்கும் தேசியத் தலைவரின் சகோதரி வினோதினி மலேசியாவுக்கு வந்து தனது தாயாரை சந்தித்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இறுதிப்போரின் போது, தேசியத் தலைவரின் தந்தை வேலுப்பிள்ளையும், தயார் பார்வதி அம்மாள் இருவரும் சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். பின்பு இவர்களை கொழும்பில் உள்ள சிங்கள கடற்படை குடியிருப்பில் காவலில் வைத்தது.

ஏற்கனவே பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த வேலுப்பிள்ளை சிங்கள ராணுவ சித்ரவதையை தாங்க முடியாமல் மரணமடைந்தார். அவரது உடலை உறவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ் தேசிய அமைப்புகள் கேட்டுக் கொண்டதை அடுத்து வேலுப்பிள்ளையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் யாழ்ப்பாணம் அருகே உள்ள சொந்த ஊரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கணவர் மரணம் அடைந்ததையடுத்து பார்வதி அம்மாளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும், அவரை அவரது மகள்களுடன் ஒப்படைக்கும் பொறுப்பையும் சிவாஜிலிங்கம் ஏற்றுக்கொண்டார். பின்னர் பார்வதி அம்மாளை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று, உறவினர்களிடம் ஒப்படைத்தார். அங்கிருந்து மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பார்வதி அம்மாள், கனடாவில் இருந்து வந்திருந்த பிரபாகரனின் சகோதரி வினோதினியிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தாயார் பார்வதி அம்மாளை கனடாவிற்கு அழைத்துச் செல்ல தேசியத் தலைவரின் சகோதரி வினோதினி தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. ஆனால் அவரை கனடாவிற்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவரது உடல்நிலையை காரணம் காட்டி அவர் கனடாவில் குடியேறுவதற்கான அனுமதியை அந்த நாட்டு அரசாங்கம் நிராகரிக்கவும் முடியும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் பார்வதி அம்மாவை இந்தியாவுக்கு அனுப்பி இந்தியாவில் உள்ள அவரது இன்னொரு மகளான ஜெகதீஸ்வரி மதியாபரணத்துடன் வாழ வைக்க முடியும். அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்புவதிலும் பிரச்சனைகள் ஏற்பட்டால், மீண்டும் தாய் நாட்டிக்கே அழைத்து வரவேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

2 Responses to மகளை சந்தித்தார் தேசியத் தலைவரின் தாயார்

  1. மிக விரைவில் தனது இளைய மகனையும் (தேசியத் தலைவர்) சந்திப்பார்.

     
  2. Unknown Says:
  3. manathuku aruthalaaka irukkirathu

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com