அதனைத்தொடர்ந்து ஈழவிடுதலைக்காக உயிர்நீத்த வீரர்களுக்கும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் கொல்லப்பட்ட மக்களையும் நினைவு கூர்ந்து அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. மங்களவிளக்குகளை இந்தியாவில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்த திருமதி சுதா சந்திரன் அவர்களும், பிரான்ஸ் நகரமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஏற்றிவைத்தனர்.
ஆடற்கலையகம் Ponautal Combaul கலாபவனம் திரு. முருகையா அருள்மோகன், தமிழ்ச்சோலை Noisy le Grand திருமதி. சாரதா அற்புதகுணராஜா, நர்த்தனாதீரா நடனாலயம் திருமதி. தாரணி சிறீதரன், நாட்டியாஞ்சலி கலைகல்லூரி - அண்ணாமலை கலைக் கல்லூரி திருமதி. சர்மிலி சிவலிங்கநாதன், எவ்ரி தமிழ்ச்சோலை திருமதி. மகேந்திரன் டெஸ்மினி, ஆதி பராசக்தி நாட்டியப்பள்ளி- குசன்வீல் தமிழ்ச்சோலை திருமதி. மோகனருபி தில்லைருபன், வால் யுறொப் தமிழ்ச்சோலை - சுமித்திரா பரதநாட்டியாலயம் திருமதி. கஸ்தூரி ஜெகதீபன், சென்தெனிஸ் தமிழ்ச்சோலை திருமதி. துர்க்கா விக்னேஸ்வரன், சார்சல் தமிழ்ச்சோலை திருமதி. ஜெயரஞ்சனி இராஜேந்திரகுமார், நந்தியார் தமிழ்ச்சோலை திருமதி. சுகிர்தா சசிதரன், சேர்ஜி தமிழ்ச்சோலை- ரான்சி தமிழ்ச்சோலை திருமதி. றோணி செல்வராஜ்,பாரீஸ் 13 தமிழ்ச்சோலை திருமதி. பவிதராணி ரகுதாஸ், அபிராமி நாட்டியாஞ்சலி திருமதி. சுரேஸ் ரேணுகா, செல் தமிழ்ச்சோலை- நியூலி சூர் மார்ன் தமிழ்ச்சோலை திருமதி. வினோதா செந்தூரன், நிருத்திய தர்ப்பனா திருமதி. ரெனின்ரா ஜோர்ஜ், நர்த்தனா விருக்சா திருமதி. மஞ்சுளா சிறீதரன், பொண்டி தமிழ்ச்சோலை திருமதி. பிரேமராணி மகேஸ்வரன், வில்நெவ் சென் ஜோர்ஜ் தமிழ்ச்சோலை- நாட்டிய சாஸ்திரா பள்ளி திருமதி. செலினா மகேஸ்வரன், சோதியா கலை கல்லூரி- தமிழ்ச்சோலை இவ்ரி 94 திருமதி. அனுசா மணிவண்ணன், Noisy le Grand II தமிழ்ச்சோலை செல்வி. அர்ச்சனா, கலாலயம் நடனப் பள்ளி திருமதி. கேளசலா ஆனந்தராஜா, தமிழ்ச்சோலை பாரீஸ் 15 திருமதி. துர்க்கா விக்னேஸ்வரன், நிருத்தியாலயம் கலைக் கல்லூரி - ஆர்ஜெந்தை தமிழ்ச்சோலை திருமதி. மீரா மங்களேஸ்வரன், செவ்றோன், ஒல்நே சூபுவா தமிழ்ச்சோலைகள் - கவின் கலையகம் திருமதி. தனுசா மகேந்திரராஜா, பாரதி அக்கடமி ரூ ஈஸ்வரி பாடசாலை திருமதி. சுலக்~னா இராஜேஸ்வரன், தொர்சி தமிழ்ச்சோலை திருமதி. கலைவாணி செந்தில்குமரன், ஆகிய 43 நடனப்பள்ளிகளின் 39 நடனங்கள் இடம்பெற்றது.
சிறப்பு நடனமாக பாடகர் கண்ணன், மிருதங்க வித்துவான் பிரணவநாதன் குழுவினர், பிரான்ஸ் நாதஸ்வர வித்துவான் நந்தகோபன், தவில் வித்துவான் இராமச்சந்திரன், வயலின் வித்துவான் கோமளா கந்தையா ஆகியோரின் இசையில் பஞ்ச வாத்திய நிருத்தியம் அருள்மோகன், மஞ்சுளா, செலினா, ஜெயரஞ்சினி, மோகனரூபி ரேணுகா ஆகியோர் நடனங்களை வழங்கினர்.
மற்றும் பவிதராணி, சுகிதா, திசேந்தினி, டெஸ்மினி ஆசிரியர்களின் நடனங்கள் இடம் பெற்றது.வரவேற்புரையை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் கௌரவ உறுப்பினர் விநாயகமூர்த்தி அவர்கள் வழங்கினார். பிரான்சில் உள்ள பல கட்சிகளின் பல உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரபிதாக்கள், நகரமன்ற உறுப்பினர்கள், சமூகப்பிரமுகர்கள் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர். தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் தமது உரையில் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் தொடர்ந்து பணியாற்றும் என குறிப்பிட்டார்.
நடனக்கலைஞர்களுக்கான சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்களும், த.பு.க உறுப்பினர்களும், வர்த்தக உரிமையாளர்களும் வழங்கி கௌரவித்தனர், நடன ஆசிரியர்களுக்கான சிறப்பு விருதுச் சான்றை சுதா சந்திரன் வழங்கி கௌரவித்தார். சுதா சந்திரன் அவர்கள் தெரிவிக்கையில் அருமையான கலை படைப்பைக்கண்டு களித்தேன், பிரான்ஸ் மண்ணில் இவ்வளவு அழகாக ஆடுவார்கள் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்ததோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
சிறப்புரையை தமிழர் புனர்வாழ்வுக்கழக பிரான்ஸ் பணிப்பாளர் செ.சுந்தரவேல் அவர்கள் வழங்கினார். நன்றியுரையை செயலாளர் தி.ரவீந்திரன் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சித்தொகுப்பை எஸ்.கே ராஜன் , செல்வி சிந்துஜா ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஒலி ஒளி அமைப்பை அருளானந்தன் அவர்களும், நிழற்படப் பிடிப்பை மணிவண்ணன் அவர்களும், காணொளிப்படப்பதிவை தீபன் ஸ்ரூடியோ குழுவினரும் வழங்கி பணியாற்றினர், பாரஊர்தி உதவிகளை வி எஸ் கோ வர்த்தக நிலையம் வழங்கியது.
விழாவின் நடனங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது. மண்டபம் நிறைந்த மக்களுடன் அதிகாலை 1 மணிக்கு விழா இனிதே நிறைவுபெற்றது.



0 Responses to பிரான்சில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் "சலங்கை"