பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் இரா.சம்பந்தனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் விசேட செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் இந்த நடவடிக்கையில் சில பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை மாவட்டத்தில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இவற்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தலா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் காணப்படும் முறுகல்நிலையை பயன்படுத்தி திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிப் பெற்று மேலதிக ஆசனத்துடன் இரண்டு பேரை வெற்றிப் பெறச் செய்ய அரசாங்கம் ஏற்கனவே கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன்பிரகாரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடும் செளந்தரராஜாவை சுதந்திரமாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள இடமளித்து இரா.சம்பந்தனை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பசில் ராஜபக்ஷ கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈழநேசன்இணையம்



0 Responses to திருகோணமலையில் சம்பந்தனை தோற்கடிக்க அரசு திட்டம்!