நோர்வே தமிழர் சுகாதார அமைப்பானது நோர்வேயில் வசிக்கும் தமிழ் மக்களால், சுகாதார ஆலோசனைக்காய் உருவாக்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனமாகும்.இந்நிறுவனம் 2003 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்திலும், நோர்வேயிலும் பல மருத்துவ, சுகாதார வேலைத்திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து வருவது யாவரும் அறிந்ததே. ஞாயிறு மாலை (21-03-2010) ஆறு மணிக்கு நோர்வே பேர்கன் நகரில் நோர்வே தமிழர் சுகாதார அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்ட விசேட கலை நிகழ்வுகள், வேலைத் திட்டங்கள் விவரிப்பு, சிறப்பு வருட இதழ், உலகத் தமிழர்களுக்கான நீரிழிவு நோய் விழிப்புணர்வு கையேடு வெளியீடுகளும் நடைபெறவுள்ளன.
இதில் நோர்வே வாழ் தமிழர்கள், அனைத்து இன மக்களையும் கலந்து கொள்ளச் செய்து இந்நிகழ்வினை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.
நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு.
நோர்வே.



0 Responses to கலைகளின் மாலை -நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு