Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா முகவர்கள், முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய உணர்வாளருமான ஈழவேந்தன் வீட்டிற்குச் சென்று மறைமுகமான மிரட்டல் விடுத்ததாக நம்பகமான கனடாத் தகவல் ஒன்று சங்கதிக்குத் தெரிவித்தது.

குறித்த முக்கியமான இரு முகவர்கள் ரொரண்டோவில் உள்ள ஈழவேந்தனின் இருப்பிடம் சென்று தேர்தல் முடியும் வரையாவது, குறிப்பாக சம்பந்தன், மாவைசேனாதிராஜா, சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோரைப் பற்றி பகிரங்கமாக எதுவும் பேசவேண்டாம் என கேட்டுக்கொண்டதாக அத்தகவல் தெரிவிக்கின்றது (அதாவது எஸ்.எம்.எஸ் அணியினர் என அழைக்கப்படும் அம் மூவரைப்பற்றிய உண்மைகளை எவரிடமும் கூற வேண்டாம் என கேட்டுள்ளனர்).

இந்த நடவடிக்கையானது தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சி நிலையே தெட்டத்தெளிவாக விளக்கி நிற்பதாக குறித்த தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஈழத்தில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை முற்றாக நிராகரித்து வருவதாகவும், வடபகுதியிலும், திருமலையிலும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முண்ணணிக்கு ஈழத்தமிழ் மக்கள் பாரிய ஆதரவினை வழங்கி வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தோல்வி அடைந்து விடுவோம் எனும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் நம்பகரமான தாய்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to நேற்று கனடாவில் உள்ள ஈழவேந்தன் ஐயாவின் வசிப்பிடம் எஸ்.எம்.எஸ் அணியினரால் முற்றுகை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com