¨சென்னைக்கு செல்லும் செல்லும் ஈழத் தமிழர்களின் விபரங்களை விமானநிலையத்தில் கியு பிரிவு காவல்துறையினரால் ரகசியமாகச் சேகரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை விமானநிலையத்தில் இந்தியாவில் அவர்கள் எங்கு தங்கப் போகிறார்கள் என்ற படிவத்தை நிரப்பிக்கொடுக்கவேண்டும், அப்படிவத்தை வைத்து அவர்கள் செல்லவிருக்கும் உறவினர்களின் வீடுகள் கண்காணிக்கப்படுவதாகவும், பின்னர் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.குறிப்பாக தமிழ் நாட்டில் அப்படி தங்கியிருக்கும் ஏதிலிகள், மே மாதத்திற்கு பின்னர் இந்தியா வந்திருந்தால் அவர்கள் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிலர் காணாமலும் போயுள்ளனர். எனவே எமது உறவுகள் இந்தியா செல்லும்போது விடுதி ஒன்றை எடுத்து அந்த விலாசத்தை பயன்படுத்துவதே சிறந்த முறையாகும்.
வன்னிப்போர் முடிந்தபின்னர், வவுனியா தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டுக்கு ஏதிலிகளாகச் சென்றுள்ளவர்களின் விவரங்களை தமிழ்நாடு போலீஸும், புலனாய்வுத் துறையினரும் சேகரித்து வருகின்றனர்.
கட்டுநாயகா விமானநிலையத்தில் இருந்து காட்டிக்கொடுத்த சில துரோகிகள் இப்பொழுது தமிழகம் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



0 Responses to சென்னை விமானநிலையத்தில் ஈழத் தமிழர்களின் விபரங்கள் சேகரிப்பு