இலங்கையில் பொதுத் தேர்தலுக்கு பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்கும் என கூறப்படுகின்றது. இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப் பட்டது.பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி கண்டாலும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக தெரிவு செய்யப்படுவார். இதன் அடிப்படையிலேயே அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இடம் பெற்றதாக கூறப்படுகிறது.
சரத் பொன்சேகா சுதந்திரமாக செயற்படும் பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்க் கட்சிகளின் பிரதான தலைவர் என்ற அந்தஸ்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் அமையும். சரத் பொன்சேகா குறுங்காலத்தில் பெற்ற பிரசித்தத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளின் பல உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக செயற்பட முன்வந்துள்ளமையே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
எனினும் சரத் பொன்சேகாவை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அண்மைக் காலமாக ரணில் விக்கிரமசிங்க முயற்சி மேற்கொண்டமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்.எனவே சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பிலோ, அல்லது தடுத்து வைக்கும் அடிப்படையிலோ ரணில் விக்கிரமசிங்க அதீத அக்கறை காட்டிக்கொள்வதில்லை.
இந்தநிலையில் அண்மையில் ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின்போது சரத் பொன்சேகா விடுவிக்கப்படுவதற்கு ஜனாதிபதியால் தேசிய அரசாங்கம் நிபந்தனையாக முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் சரத் பொன்சேகாவை விடுவிக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க செயற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில் ரணில் விக்கிரமசிங்கவை பொதுத்தேர்தலை நடத்தாது பிரதமராக நியமிப் பது தொடர்பில் ஜனாதிபதி தீர்மானித்திருந் ததாகவும் எனினும் பொதுத் தேர்தலை நடத் தியதன் பின்னர் இதனை மேற்கொள்ளுமாறு ரணில் விக்கிரம சிங்க கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே நாடாளுமன்றத்தின் இறுதிக்கூட்டம் நடத்தப்பட்டதன் பின்னரும் அது கலைக்கப்படாமல் பிறிதொரு நாளில் கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் முழுமையான நோக்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதாகவே காணப்படுகிறது. எதிர்கால வரலாற்றின் எந்த இடத்திலும் தமது பெயர் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிப்படையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த யாப்பு சீர்தி ருத்தத்தையும் மேற்கொள்கிறார்.
இதன் அடிப்படையிலேயே அவரது உருவம் பொறிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நாணயத் தாளும் வெளியிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.அத்துடன் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மகிந்த ராஜபக்சவின் பெயரைச் சூட்டும் முயற்சியும் காணப்படுகிறது.
இந்நிலையில் நிலையான ஆட்சிக்காகவும் தமது நோக்கமான யாப்பு சீர்திருத்தத்திற் காகவும் மகிந்த ராஜபக்ச இந்த தேசிய அரசாங்க கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதற்கிடையில் தேசிய அரசாங்கத்தை முழுமையாக நம்பிக்கை இல்லாத ரணில் விக்கிரமசிங்க தேர்தலின் பின்னர் ஒருவேளை ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறுமாக இருந்தால் தேசிய அரசாங்கத்தை நிராகரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் அடிப்படையிலேயே அவர் பொதுத் தேர்தலுக்கு முன்னுரிமை வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதவன்



0 Responses to தேர்தலின் பின் தேசிய அரசு? ரணில் பிரதமர்