Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமைதியாக வாழ்வதற்கு விரும்புகிற, நியாயமான தீர்வை தமிழர்களுக்கு கிடைக்க விரும்பும் முந்தைய போராளிகளை இணைந்து பணியாற்ற முரளிதரன் அழைப்பு விடுத்திருக்கிறார்.

கொழும்பில் நேற்று நடந்த புலிகள் குறித்த சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது:

ஒவ்வொரு பயங்கரவாதக் குழுவிலும், என்னைப் போல் அமைதியான தீர்வை விரும்புபவர்களும் இருக்கத்தான் செய்வர். அரசும், அதிகாரிகளும் அந்த அமைதி விரும்பிகளை வரவேற்று அங்கீகரிக்க வேண்டும். அவர்கள் அரசுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பிரச்னைகளுக்கான தீர்வைக் காண வாய்ப்பளிக்க வேண்டும்.

இப்போது, தமிழர்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களது வறுமையைப் போக்கும் செயல்களில்தான் அரசின் கவனம் இருக்க வேண்டும். இவ்வாறு முரளிதரன் தெரிவித்தார்.

0 Responses to அமைதியாக வாழ விரும்பும் புலி ஆதரவாளர்களுக்கு அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com