Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரத்குமாரின் சுய மரியாதையை பாதிக்காத வகையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி அமைக்கப்படும் என்று அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ சக்தி என்கிற நிகழ்வு நடைப்பெற்றது. அப்போது பேசிய ராதிகா சரத்குமார், நாட்டின் பல்வேறு துறைகளிலும் மகளிர்களின் பங்கு என்பது வெறும் 11 சதவிகிதமாக மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார்.  பெண்கள் அரசியலில் மிகுந்த ஆர்வம் காண்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு அதிகம் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் ராதிகா கூறியுள்ளார். சரத்குமாரின் சுய மரியாதையை பாதிக்காத வகையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். பாஜகவுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே சமத்துவ மக்கள் கட்சி கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து உள்ளது என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to சரத்குமாரின் சுய மரியாதையை பாதிக்காத வகையில் கூட்டணி அமைக்கப்படும்: ராதிகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com