வட கிழக்கில் பாரபட்சமான முறையில் வேட்பாளர்கள் நடத்தபடுவது குறித்து முறைப்பாடுகள் தொடர்ந்தும் வந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக அரசு சார்பில்லாத கட்சி வேட்பாளர்கள் சிறீலங்கா இராணுவத்தின் அச்சுறுத்தல்களிற்கு உள்ளாகி வருகின்றனர்.இதனால்சுதந்திரமான முறைகளில் செயல்படமுடியாதவாறு அல்லலுறுகின்றார்கள். யாழில் சுதந்திரமான முறையில் தேர்தல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு மறுபுறத்தில் இவ்வாறான கெடுபிடிகளை இராணுவம் முடுக்கி விட்டுள்ளது.
நேற்று காலை தனது தேர்தல் பிராச்சாரத்திற்காக யாழில் இருந்து கிளிநொச்சி சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் வைத்திய கலாநிதி கந்தசாமி திருலோகமூர்த்தி அவர்களை பரந்தன் சோதனைச்சவாடியில் வைத்து சிறீலங்கா இராணுவத்தினரால் சோதனை என்ற பேரில் கெடுபிடிகளிற்கு உள்ளாக்கி திருப்பி அனுப்பபட்டார்.
இதனால் அவர் தனது நடவடிக்கைகளை தொடர முடியாது யாழ் திரும்பி கட்சி தலைமைக்கு இது குறித்து தனது அசௌகரிகத்தை தெரியப்படுத்தி உள்ளார்.



0 Responses to தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் திருலோகமூர்த்திக்கு சிறீலங்கா இராணுவம் அச்சுறுத்தல்