Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் இன்று காலை 10.30 மணியளவில் ஊடகவியலாளர்களினால் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் தமது வாயில் கட்டியிருந்த பட்டியில் தம்மை உண்மையை சொல்வதற்கு இடமளியுங்கள் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் பிரகீத்தின் மனைவி பிள்ளைகளுக்கு நீதியை நிலைநாட்டுங்கள், சிரச ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்கு, ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு நீதியான விசாரைண எப்பபோது? போன்ற வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரார்கள் ஏந்தியிருந்தனர்.

இப்பதாதைகளில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் இருந்ததே தவிர தமிழ் மொழியில் எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை.

0 Responses to கொழும்பில் ஊடகவிலயாளர்களின் சத்தியாகிர போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com