Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னி ஆக்கிரமிப்பின் பின்னர் மக்களால் கைவிடப்பட்ட வன்னி மக்களின் சொத்துக்கள் பரந்தன் உமையாள்புரம் பகுதியில் வைத்து மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாவது தொடர்பிலான தகவல்கள் வெளிவந்துள்ளன. உமையாள்புரம் பகுதிக்கு கொண்டுவரப்படுகின்ற உழவியந்திரம் உட்பட்ட ஊர்திகள் மற்றும் உந்துருளிகள் அங்குள்ள பாரிய பதுங்குகுழி ஒன்றினுள் இறக்கப்பட்டு கழற்றப்படுகின்றன.

கழற்றப்பட்ட உதிரிப்பாகங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தும் தென்னிலங்கை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் இருந்தும் செல்லும் கொள்வனவாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் விற்பனைசெய்யப்படுகின்றன.

உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நபர்கள் வன்னியில் மீளக் குடியேறியவர்கள் என்றும் ஊர்திகளை குறிப்பிட்ட பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரே வழங்கிவருவதாகவும் அறிய முடிகின்றது.

வவுனியாவில் நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் தமது பொருட்கள் இவ்வாறு விற்பனையாவது குறித்து அறிந்ததும் முகவர்கள் ஊடாக விற்பனையான பொருட்களைக் கண்ணுற்றுள்ளனர். அவ்வாறு உதிரிப்பாகங்கள் காணப்பட்டாலும் முழுமையான வாகனங்களையோ உந்துருளிகளையோ பெறமுடியாத அளவிற்கு அவை பகுதிகளாக்கி விற்கப்படுவதாகவும், வாகனங்கள் அல்லது உழவியந்திரங்கள் முழுமையாக காணப்பட்டால் அவற்றின் இலக்கங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பல மாதங்களுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் வன்னி சேல் என வன்னியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட அனைத்துப் பொருட்களும் விற்பனையாகியிருந்தமை தொடர்பிலான செய்திகள் வெளியாகியிருந்தமை தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று வடமாகாண ஆளுநர் வெளியிட்டுள்ள செய்தியில் வன்னியில் கைவிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் வன்னியில் எந்தப் பொருட்களும் இல்லை அவை விடுதலைப் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன என்று வடக்கு அபிவிருத்திக் குழுவின் தலைவர் பசில்ராஜபக்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to உமையாள்புரம் வன்னிமக்களின் சொத்துக்கள் விற்பனையாகும் கள்ளச்சந்தை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com