வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் கைது செய்யப்பட்டு சிறீலங்கா படையினரால் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளில் 106 பேரை இன்று சிறீலங்கா படையினர் விடுதலை செய்துள்ளனர்.விடுவிக்கப்பட்ட 106 பேரில் ஏழு பேர் உடல் நலம் குன்றியவர்களாவர் மற்றும் 41 பேர் யாழ்பல்கலைக்கழக மாணவர்கள்;. சிறீலங்கா படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருசிலரையே தற்போது சிறீலங்கா அரசாங்கம் விடுவித்துள்ளதாக தெரியவருகிறது.
இதுதொடர்பில் யாழ் துணைவேந்தர் கருத்து தெரிவிக்கையில் தமது பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் இணைந்து தமது கல்வி நடவடிக்கைகளை தொடரலாம் எனத் தெரிவித்துள்ளார்.



0 Responses to தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 106 இளைஞர்கள் விடுதலை