“தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை” என்ற கொள்கைகளைக் கைவிட்டு, சரணாகதி அரசியலுக்குள் நுழைந்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் இருப்பவர்கள்இ அந்தப் பதவிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.“தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு” ஆதரவு திரட்டும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தினை கடந்த வியாழக்கிழமை மாலை கனடா கந்தசுவாமி கோவிலில், கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு நடத்தியிருந்தது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய ஈழவேந்தன் இந்தக் கோரிக்கையினை முன்வைத்தார்.
தந்தை செல்வா கைவிட்ட தீர்வுத் திட்டத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையில் எடுத்திருப்பதாகவும் இது தமிழ் மக்களின் விடுதலைப் பாதையையும், எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கும் எனவும் ஈழவேந்தன் சுட்டிக்காட்டினார்.
சுமார் 40 நிமிடங்கள் பேசிய அவர், தமிழர்கள் கடந்துவந்த பாதைகளை எடுத்து விளக்கியதன் ஊடாக இனிவரும் நாடட்களில் நடந்து செல்லும் பாதையையும் தெளிவு படுத்தினார்.



0 Responses to தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அகற்றப்பட வேண்டும்: ஈழவேந்தன்