யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் சமூகத்துடன் இடம்பெற்ற சந்திப்பில், சைக்கிள் சின்னத்தில் திருக்கோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும் போட்டியிடும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி “ஒரு நாடு இரண்டு தேசங்கள் எனவும்”, வீட்டுச் சின்னத்தில் தமிழர் தாயகம் எங்கும் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “ஒரு நாடு – இரண்டு தேசிய இனங்கள்” என்ற கோட்பாடுகளை முன்வைத்துள்ளன.
இது பற்றி மேலும் கருத்துரைத்த இதயச்சந்திரன், கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தமது அடிப்படைக் கோட்பாடுகள் தொடர்பாக எந்தவித குழப்பமும் இன்றிக் காணப்படும் அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பாக அடிக்கடி மக்களைக் குழப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முஸ்லீம்கள் உட்பட தேசிய இனங்கள் உலகில் பல இருக்கின்ற போதிலும், உலகில் இறைமையுள்ள தேசிய இனங்கள்தான் தம்மை தேசம் என அழைத்துக் கொள்வார்கள் எனவும் குறிப்பிட்ட அவர், “தேசம்” என்பதற்குள் தேசிய இனங்கள் அடங்குகின்ற போதிலும், “தேசிய இனங்கள்” என்ற பதத்திற்குள் இறைமையுள்ள தேசிய இனம் என்பது உள்ளடங்க மாட்டாது எனவும் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “இறைமை” என்ற சொல்லாடலை வேண்டுமென்றே தவிர்த்து வருவதாகச் குறிப்பிட்ட இதயச்சந்திரன், தமிழ் மக்களிற்கு தனியான இறைமை இருக்கின்ற போதிலும், சிங்களத்தின் இறைமையைப் பகிர்ந்துகொள்ளும் சமஸ்டி முறைமை பற்றியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பேசி வருவதாகத் தெரிவித்தார்.
தாயக மக்கள் தற்பொழுது அடிப்படைத் தேவைகளை எதிர்நோக்கியுள்ளதை மறுக்க முடியாது எனக்குறிப்பிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, இருப்பினும் எமது தாயகக் கோட்பாடுகளிலும்இ இலட்சியத்தில் இருந்தும் யாரும் விலக முடியாது எனவும், அவ்வாறு செய்வது தம்மை ஈகம் செய்த மாவீர்களுக்கும்இ கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும் நாம் செய்யும் துரோகம் எனவும் சுட்டிக்காட்டினார்.



0 Responses to தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றுடன், தேசம் என்ற கோட்பாடும் மிகவும் முக்கியம்: ஜெயானந்தமூர்த்தி