Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திட்டமிட்டப்படி மே 18ல் மாநாடு: சீமான்

பதிந்தவர்: தம்பியன் 22 April 2010

பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க முத்துக்குமரன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் புதுக்கோட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தற்கு வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் எதுக்கென்றால் எங்களின் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனின் அம்மாவும், எங்களின் தாயாருமான பார்வதி அம்மாள் அவர்களை இந்த அரசுகள் திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்தும், எங்கள் இயக்கத் தோழர் முத்துக்குமரன் மீது 3 வருடத்திற்கு முன் முடிந்து போன வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுத்து கைது செய்ததை கண்டித்தும் நடத்தப்படுகிறது.


மே 18ஆம் தேதி நாம் தமிழர் மாநாடு நடத்தப்பட உள்ளது. அந்த மாநாட்டை முடக்கும் விதமாக எங்கள் தோழர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 18ஆம் தேதி எவ்வளவு அடக்கு முறை வந்தாலும் திட்டமிட்டப்படி மாநாட்டை நடத்தியே தீருவோம். மாநாட்டில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதை இப்போது என்னால் சொல்ல முடியாது.

எங்கள் இயக்கத் தோழர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வந்தாலும் அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள். அவர்களுக்கு என்ன பாதுகாப்பு என்று கேட்கலாம். இயக்கத்தில் உள்ள 75 சதவீத பேர் வழக்கறிஞர்களாக உள்ளனர். அதனால் இயக்கத்தில் உள்ளவர்களுக்கு சட்டப்படி பாதுகாப்பு கொடுப்போம்.

எந்தப் பிரச்சனை வந்தாலும் சட்டப்படி கையாள எங்கள் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். உடனடியாக மத்திய மாநில அரசுகள் முத்துக்குமரனை விடுதலை செய்ய வேண்டும். எங்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டே இருக்கும் என்றார்.

0 Responses to திட்டமிட்டப்படி மே 18ல் மாநாடு: சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com