மருத்துவ சிகிச்சை பெற சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியேற்றத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதை கண்டித்து சென்னை எழும்பூரில் ம.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது.
போராட்டத்தில் பேசிய வைகோ, மனிதாபிமானமற்ற முறையில் பார்வதி அம்மாளை மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்பியுள்ளன என்றார்.
விசாவை நீட்டித்து அவர் இந்தியாவில் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராஜபக்சேவின் மகன்களுக்கு இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், பார்வதி அம்மாளை மட்டும் திருப்பி அனுப்பியது ஏன் என்று மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பின்னர் பேசிய தமிழ் தேசிய கட்சித் தலைவர் பழ.நெடுமாறன், பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட அன்று சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ம.தி.மு.க., தமிழ் தேசிய கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.



0 Responses to தேசியத்தலைவரின் தாயாரை திருப்பி அனுப்பப்பட்டது ஏன்? வைகோ