Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியாவில் எதிர்வரும் மே 2ஆம் திகதி நடைபெற இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், தேர்தல் ஆணாயாளர்களுக்குமான சந்திப்பு ஒன்று நேற்று (17-04-2010) லண்டனில் நடைபெற்றது.

லண்டன் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள கிறவுண் பிளாசா ஹோட்டலில் நேற்று (17-04-2010) சனிக்கிழமை மாலை 2:30 ற்கு இச்சந்திப்பு இடம்பெற்றது.

இரண்டு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பித்த இந்த நிகழ்வு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெர்றது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை கையளித்திருந்ததாகவும் அதில் இருவரின் வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையகத்தின் விதிகளுக்கமைய நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய ஆனைவரும் அதாவது 38 வேட்பாளர்கள் தகுதியுடையவர்களாக தாங்கள் முடிவெடுத்துள்ளதாகவும் தெருவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது தேர்தல் ஆணையகத்தால் தேர்தலில் போட்டியிட தகுதியான வேட்பாளர்களின் பெயர் விபரம் அறிவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும், வேட்பாளர்களுக்கான குறியீட்டு இலக்கங்களும் வழங்கப்பட்டது.

பிரித்தானியாவில் வசிக்கும் பிரபல சட்டத்தரணி சிறீஸ்கந்தராஜா அவர்கள் வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில்... தமிழீழத்திலே வாழ்கின்ற தமிழர்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக நடத்தப்படுகின்ற தேர்தலுக்கான இந்த முன்னோடிக்கூட்டத்திலே உங்களோடு தமிழில் பேசுவதே முறை என்று நினைக்கிறேன்.

இந்த தேர்தல் நடத்துவது என்பது எமக்கு இந்த புலம் பெயர்ந்த நாட்டிலே ஒரு புதிய முயற்சி. அந்த முயற்சியை முன்னெடுத்துப் போகின்ற வேளையிலே பல பிளைகள், குறைகள் நேரலாம். இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற நீங்கள் அந்த நிலமையை நன்குணர்ந்து குறை கூறுவதையும், பிளை பிடிப்பதையும் தவிர்த்து இந்த தேர்தலை நல்லபடியாக நடத்திவைக்க ஒத்துளைக்கவேண்டுமென்று உங்கலை வேண்டிக்கொள்கிறேன் என தெருவித்தார்.

இதன் பின்னர் வேட்பாளர்களினால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு தேர்தல் ஆணையாளர்கள் உரிய விளக்கங்களை அளித்தனர். அத்தோடு மே 2ஆம் திகதி தேர்தல் நடைபெற்று மறுநாள் 03-05-2010 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையகத்தால் தெருவிக்கப்பட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் பிரித்தானியா சார்பில் போட்டியிரும் வேட்பாளர்களின் விபரம்;

வடமேற்கு லண்டன்

01) நிமலன் சீவரத்தினம்
02) ஜெயவாணி அச்சுதன்
03) பாலந்திகா முருகதாஸ்
04) சொக்கலிங்கம் யோகலிங்கம்
05) சுகந்தமலா ராதாகிருஷ்ணன்
06) லலிதசொரூபினி பிரதீபராஜ்
07) சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி
08) சிவபூசம் சுகுமார்
09) சிவசம்பு சிவராஜா
10) சுகிர்தகலா கோபிரட்ணம்
11) டிலக்சன் மொறிஸ்

வடகிழக்கு லண்டன்

01) மணிவண்ணன் பத்மநாதன்
02) செல்லத்துரை செல்வராஜா
03) மனோகரன் ஆறுமுகம் கந்தையா
04) முருகவேள் ஹரன்
05) ஆறுமுகம் ஆர்த்தி
06) சுந்தரம்பிள்ளை செந்தில்நாதன்
07) முருகதாஸ் வாசுகி
08) ஹவிராஜ் சண்முகநாதன்
09) மகேஸ்வரன் சசிதர்

தெங்கிழக்கு லண்டன்

01) தவகீதா சிதம்பரப்பிள்ளை
02) மனோரஞ்சன் நிக்லஸ்
03) சுரேந்திரன் ஜனார்த்தனன்

தென்மேற்கு லண்டன்

01) ஜெயசங்கர் முருகையா
02) நமசிவாயம் சத்தியமூர்த்தி
03) பரமசிவம் கார்த்திகேசன்
04) அப்பாத்துரை வைரவமூர்த்தி
05) டேவிட் ஜோசப்
06) வாசுகி சோமஸ்கந்த
07) தணிகாசலம் தயாபரன்
08) ருத்ராபதி சேகர்
09) வடிவேலு சுரேந்திரன்

லண்டன் தவிர்ந்த ஏனைய பிரித்தானிய பகுதிகள்

01) சின்னத்துரை சிறீரஞ்சன்
02) வன்னியசிங்கம் குணசீலன்
03) லோகேஸ்வரன் சிவசுப்பிரமணியம்
04) ஆறுமுகம் விவேகானந்தராஜா
05) நவரத்தினம் பரமகுமாரன்

0 Responses to பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்: 38 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com