நிகழ்வில் பொதுச்சடரினை ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத்தின் உப தலைவர்
திரு. ரெஜினோல்ட் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம், தேசியத் தலைவர் அவர்களினது சிந்தனையை உள்ளத்தில் இருத்தி, அன்னை பூபதி அம்மாவின் திருஉருவப்படத்திற்கு மலர்வணக்கம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நினைவுக்கட்டுரையும், கவிதைகளும் இடம் பெற்றிருந்தன.
ஈழத்தமிழினத்தின் விடுதலைக்காக தங்களினுடைய இன்னுயிர்களை அர்ப்பணித்தவர்களை நாம் ஒரு பொதும் மறந்துவிடலாகாது. அப்படி மறந்தால் நாம் மனிதர்களேயில்லை. புலம் பெயர் நாடுகளில் நடைபெறுகின்ற நினைவு வணக்க நிகழ்வுகளில் நாம் ஒவ்வொருவரும் நிறைந்த பங்களிப்பை வழங்குவது நமது தலையாய கடமையாகும்.




0 Responses to அன்னைபூபதி நினைவு வணக்க நிகழ்வு: பிரான்ஸ்