தமிழீழம் உருவாக தமிழக அரசியல் கட்சிகள் முனைப்பு காட்ட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தலைவர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட மன்றத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழீழம் தொடர்பான செயல் முனைப்புக்களையும், பிரச்சார முனைப்புக்களையும், தமிழக அரசியற் கட்சிகள் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ மக்களின் சுதந்திரம் மிகவும் அவசியமானது என்பதனை தமிழக அரசியல்வாதிகள் மறந்து விடக் கூடாது. ஆகவே அதனை மனதில் நிறுத்தி, தேர்தல் காலப் பரப்புரைகளின் போது, மக்கள் மத்தியில் அதற்கான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள தேசம் ஐக்கிய இலங்கை என்ற தீர்வுத் திட்டத்தை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என முன்வைத்து, தமிழீழக் கோரிக்கையினை முடக்கிவிட எத்தணிப்பதாவும், உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் சில, தமது நலன்களின் அடிப்படையில் அரசாங்கத்தின் மேற்படி திட்டத்திற்கு ஆதரவளித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 Responses to தமிழீழம் உருவாக தமிழக அரசியற் கட்சிகள் முனைப்புக் காட்ட வேண்டும் - ருத்ரகுமாரன்