ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பதினொரு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்.-கண்டி ஏ-9 வீதியின் கொக்கலிய பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள இராணுவ முகாமுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதி வேகமாகச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டையிழந்து மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. இச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமையை கவலைக்கிடமாகவுள்ளது. அதிவேகமாக வாகனத்தைச் செலுத்திய காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



0 Responses to ஏ-9 வீதியில் வாகன விபத்து 11 பேர் காயம்; மூவர் கவலைக்கிடம்