Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்தவின் நேரடி வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் குழுவினர் மீது ஈபிடிபி நடத்திய தாக்குதலில் அங்கஜன் மயிரிழையில் உயித் தப்பியுள்ளார். அவரது ஆதரவாளர்கள் மூவர் ஈபிடிபியினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மகிந்தவின் நேரடி ஆதரவாளராக தன்னை விளம்பரப்படுத்திவரும் அங்கஜன் ராமநாதனுக்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் முறுகல் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த அங்கஜனின் வாகனத் தொடரணியினை இடைமறித்த ஈபிடிபியின் நூற்றைம்பதற்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நூற்றைம்பது பேரும் துப்பாக்கி தாங்கியிருந்தாகவும் தாக்குதலை அடுத்து அங்கஜனின் வாகனத் தொடரணியின் வாகனம் ஒன்றில் இருந்த ஐந்தாயிரம் வரையான சுவரொட்டிகளை தீயிட்டுக் கொழுத்தியதாகவும் அங்கஜன் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

தாக்குதலின் போது அங்கஜனது வாகனங்கள் இரண்டு பலத்த சேதம் அடைந்துள்ளன.

வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தபோது சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புப் படையினர் தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இன்று யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மகிந்தராஜபக்ச மேற்கொண்டுள்ளதாகவும், அவரின் வரவேற்பில் அங்கஜன் கூடுதல் கவனம் செலுத்தி விளம்பரம் செய்து வருகின்றமையை அடுத்தே முறுகல் வலுப்பெற்று தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to மகிந்தவின் செல்லப்பிள்ளை அங்கஜன் மீது டக்ளஸ் தாக்குதல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com