நாம்தமிழர் இயக்க எழுச்சி மாநாடு மதுரையில் மே மாதம் 18-ந் தேதி நடக்கிறது. அப்போது நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும். நாம் தமிழர் கட்சியாக அறிவிக்கப்படும்.இதில் தமிழ் இன உணர்வுக்கு, தமிழ் பற்றுள்ள, இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். ஆட்சியில் அமருவதற்காக அரசியல் கட்சி தொடங்கவில்லை மக்களுக்கு அரசியல் பாடம் நடத்தி மக்களை தயார்படுத்தி காலம் கனிந்து வரும் போது தேர்தலில் போட்டியிடுவோம்.
உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. தாய் தமிழ் கல்வி தான் நடந்து வருகிறது. இலங்கையில் தமிழ் ஈழம் அமைய வேண்டும். தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு டைரக்டர் சிமான் கூறினார்.



0 Responses to இலங்கையில் தமிழர்கள் முள்வேலியில் அவதி: சீமான் பேட்டி