Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை சென்னைக்கு வர அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில்:

’’ஈழப்பகுதியில் அதுவும் ராஜபக்சே அரசின் கண்காணிப்பில் முகாமில் வாழ்ந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை இயக்க நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் வாழ்ந்தவர். அவரது துணைவியார் பிரபாகரனின் தாயார் பார்வதி (81). பல மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு பக்கவாதத்தினால் தாக்கப்பட்டவர்.


தனது கணவர் வேலுப்பிள்ளை இறந்த செய்தியைக்கூட சரிவரத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உடல்நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தவர்.

நேற்றிரவு 10.30 மணிக்கு மலேசியத் தலைநகர் கோலா லம்பூரிலிருந்து மருத்துவ சிகிச் சையை சென்னையில் பெறுவதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனக்கு உதவியாக ஒரு நர்சுடன் வந்துள்ள அவரை, சென்னையில் இறங்கி சிகிச்சை பெற அனுமதிக்க முடியாது என்று விமான நிலைய அதிகாரிகள் மறுத்து அதே விமானத்திலேயே அவரை கோலாலம்பூருக்கே திருப்பி அனுப்பி உள் ளார்கள். அவரிடம் முறைப்படி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான விசாவும் இருந்துள்ளது.

அப்படியிருந்தும் அந்த முதுமையடைந்த தாயை சென்னையில் சிகிச்சை பெறக்கூட அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பப்படுவதை விட மனிதாபிமானம் அறவே அற்ற கொடுஞ்செயல் வேறு இருக்க முடியுமா?

இதற்கு யார் பொறுப்பானவர்கள் மத்திய அரசா? அல்லது அதில் பணிபுரியும் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாச அதிகாரிகளா? என்பது நமக்குப் புரியவில்லை. யார் இதற்குக் காரணமானாலும் உலகமே வெட்கித் தலைகுனியக் கூடிய, மத்திய அரசின் செயல் கண்டனத்திற்குரியது.

தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் பாகிஸ்தானத்திலிருந்து நோயாளிகள் இங்கே வந்து அறுவை சிகிச்சை மருத்துவம் செய்து திரும்ப வில்லையா? 81 வயதான அந்த அம்மையாருக்கு சிகிச்சை அளித்தால் தீவிர வாதம் இங்கே வந்து புகுந்து கொள்ளுமா?

மத்திய அரசோ, அதன் அதிகாரம் செலுத்தும் அதிகாரிகளோ, அல்லது உளவுத் துறையோ இந்தச் செயலைச் செய்தாலும், சென்னை விமான நிலையத்தில் இக்கொடுமை நடந்துள்ளபடியால், தி.மு.. அரசுக்கும், கலைஞர் ஆட்சிக்கும் அவை சில கெட்டப் பெயரைத் தருவதாக அமையாதா?

ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பது எங்கள் அரசின் கடமை என்றும், தீவிரவாதத்தினைத்தான் நாங்கள் எதிர்ப்பவர்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் கூறி யிருக்கிறார்களே, அதன்படி பார்த்தால் பார்வதி அம்மாள் செய்த குற்றம் என்ன? பிரபாகரனுக்கு தாயாக இருந்ததுதானா?’’என்று கூறியுள்ளார்.

நக்கீரன்

0 Responses to பார்வதி அம்மாள் செய்த குற்றம் என்ன? பிரபாகரனுக்கு தாயாக இருந்ததுதானா? கி.வீரமணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com