Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியாவில் நேற்று ஆரம்பமான வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் வாக்கெடுப்பு ஒன்பது வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமானது. இன்றும் நடைபெறவுள்ள இவ்வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்கு நாடு முழுவதுமிருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர். நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒன்பது வாக்களிப்பு நிலையங்களிலும் ஆர்வத்துடன் மக்கள் பங்குபற்றியுள்ளனர். இன்றும் பெருமளவான மக்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் நடத்தப்பட்டுவரும் இவ்வாக்கெடுப்புகளில், இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களுக்குத் தனியான தாயகம் அமைக்கப்படவேண்டும் என்பதற்கு ஆதரவாக பெருவாரியான மக்கள் வாக்களித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விக்ரோரியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய மத்திய மாநிலங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அத்துடன் தபால் மூல வாக்குப் பதிவுக்கான வசதிகளும் ஏனைய மாநிலங்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பினை ஒழுங்குபடுத்தும் அவுஸ்திரேலிய தமிழர் கருத்துக்கணிப்புக்குழு தெரிவிக்கின்றது. CPI STRATEGIC எனும் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் இவ்வாக்கெடுப்பானது அவுஸ்திரேலிய ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழர்களுக்கெனத் தனியான தாயகம் அமைக்கப்படுவதற்குத் தேவையான அழுத்தத்தினை இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது ஏற்படுத்தும் எனவும், உள்நாட்டு அரசியல் தலைவர்களுக்கும் அவுஸ்திரேலிய தமிழ்மக்களின் அபிலாசைகளை சனநாயக ரீதியாக தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் எனவும் இதன் ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.




0 Responses to சுதந்திரத் தாயகத்திற்கான கருத்துக் கணிப்பின் இரண்டாவது நாளில் அவுஸ்ரேலியத் தமிழர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com