Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் தாயகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபிகள் 250 சிறீலங்காப் படையினரால் அழிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கையின் இனவதா சிங்கள ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில்:

வடக்கின் தொன்மை வாய்ந்த தொல்பொருள் சின்னங்களை அழித்து, தமிழீழ விடுதலைப் புலிகள் புதிதாக நினைவுத் தூபிகளை அமைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களின் தூபிகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு நினைவுத் தூபிகளை அகற்றும் போது தொன்மை வாய்ந்த நினைவுச் சின்னங்கள் தோன்றியதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனராம்.

தமிழர் மரபுரிமையை வெளிப்படுத்தும் நோக்கில் புலிகள் இவ்வாறு பழைய சின்னங்களை இல்லாதொழித்துள்ளதாக குறித்த இனவாதப் பத்திரிகைச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 Responses to விடுதலைப்புலிகளின் 250 நினைவுத் தூபிகள் அழிப்பு: சிங்கள ஊடகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com