Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரபாகரனின் தாயாரை தமிழகத்திற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதை கண்டித்தும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கோரியும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி சட்டக்கல்லூரி மாணவர் பசுமைவளவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று காலை 11.30 மணிக்கு சட்டக்கல்லூரி வாசல் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அவரை திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷம் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவர் பசுமைவளவன், ’’சிகிச்சைக்காக வந்த பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியது கடும் கண்டனத்துக்குரியது. சிறை கைதிகளுக்கு கூட மருத்துவ சிகிச்சை கொடுப்பார்கள்.

ஆனால் ஒன்றும் செய்யாத எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை கொடுக்காதது மனிதாபிமானமற்றசெயல். அவருக்கு மீண்டும் அனுமதி கொடுத்துசிகிச்சை அளிக்க வேண்டும், இல்லையென்றால் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்’’என்று கூறினார்.

0 Responses to தேசியத்தலைவரின் தாயாருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com