தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தாயார் சிகிச்சை பெறுவதற்கான உதவிகளை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசாங்கம் தயாராக உள்ளது என தமிழக முதலமைச்சர் கருணாநிதி இன்று தெரிவித்துள்ளார். பார்வதி அம்மாள் தற்போது கோலாலம்பூரில் சிகிச்சை பெற்று வருவதை தான் செய்திகள் மூலம் அறிந்திருந்ததாக கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.
‘அவர் தமிழ்நாட்டில் சிகிச்சை பெறுவதற்கு விரும்பினால் அவரது வேண்டுகோளைப் பரிசீலனை செய்து அது தொடர்பாக மத்திய அரசுக்குத் தெரிவிக்கும்’, என்றார் அவர்.
பாரிசவாதத்தால் அவதியுறும் 79 வயதுடைய பார்வதி அம்மா கோலாலம்பூரிலிருந்து உதவியாளர் ஒருவருடன் சென்னையை வந்தடைந்தார்.
இந்திய குடிவரவு அதிகாரிகள் அவருக்கான உள்நுழைவு அனுமதியை மறுத்ததுடன் அதே விமானத்திலேயே அவர் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
வேலுப்பிள்ளையும் அவரது மனைவி பார்வதியும் 2003ஆம் ஆண்டு வரைக்கும் தமிழ்நாட்டின் திருச்சியில் வசித்து வந்தனர். கடந்த வருடம் இவர்கள் சிறிலங்கா இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து அவரின் தந்தை இறந்த பின்னர் தாயார் மலேசியாவுக்குச் சென்றிருந்தார்.
இவர்கள் இருவரும் 2003ஆம் ஆண்டு கொழும்புக்குச் சென்ற பின்னர், பிரபாகரனது பெற்றோர் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்குமாறு தமிழ்நாட்டு மாநில அரசு மத்திய அரசினைக் கோரியதாக கருணாநிதி கூறுகிறார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தமிழ் நாட்டு அரசியல்வாதிகளால் வரவேற்கப்பட இருந்த பார்வதி அம்மாளின் வருகை தொடர்பாக தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் வந்திருந்தது அறிந்தவுடன் விமானநிலையத்திற்கு தான் தொடர்புகொண்டதாகவும் அதற்கு முன்னர் அவரை திருப்பி அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்தார் கருணாநிதி.
மேலும் அவர், முன்னர் ஆட்சியிலிருந்த ஜெயலலிதாவின் ஆலோசனைக்கு அமைவாகவே மத்திய அரசு பார்வதி அம்மாவை ”எச்சரிக்கை பட்டியலில்” இணைத்ததாகவும் ஆனால் இப்போது ஜெயலலிதா அதுபற்றி கரிசனை செலுத்தாமல் இருக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.

0 Responses to பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவுக்கு உதவுவதற்குத் தான் தயார் என்கிறார் கருணாநிதி