இதுபற்றி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாவ மேலும் தெரிவித்துள்ளதாவது
அவ்வாறான குழு ஒன்று நியமிக்கப்பட்டால் அக்குழுவுக்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்கமாட்டோம். அதனை ஏற்கனவே நாம் நிராகரித்துவிட்டோம்.
ஐக்கிய நாடுகள் சபையானது சிறிலங்கா விடயத்தில் நிபுணர் குழுவை அமைப்பதற்கு அவசரப்படுகின்றது. ஆனால் ஈராக் போரில் பிரித்தானியாவின் பங்குகொள்ளலை பற்றி ஆராய்வதற்கான குழுவை நியமிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒன்பது வருடங்கள் எடுத்திருந்ததையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
என தெரிவித்தார்
எனினும் திட்டமிட்டபடி எந்தவித காலதாமதமும் இன்றி குறிப்பிட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என பான் கீ மூன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to ஐநா நிபுணர்குழு அமைக்கலாம் நாம் அதனுடன் ஓத்துழைக்கமாட்டோம்