Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை சக்தி வாய்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் பாதிப்பேரை ஒருதலைப்பட்சமாக கூட்டமைப்பின் தலைமை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, தமிழ் காங்கிரசுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றிய நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை விலக்கிக்கொண்டது.

மேலும் தாம் நடுநிலை வகிக்கப் போவதாகவும், இம்முறை மக்கள் பொருத்தமான வேட்பாளர்களை, கட்சியை தாமே தெரிவு செய்யட்டும் எனவும், தாம் மக்களிடம் வைக்கும் வேண்டுகோள் இதுவே எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

0 Responses to கூட்டமைப்பிற்கான ஆதரவை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விலக்கியது?

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com