இலங்கையின் வடக்கு பகுதியில் மீள்குடியேறியுள்ள சுமார் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவுவதற்காக சுமார் 35 மில்லியன் டொலர் நிதியுதவியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கோரியுள்ளது.இந்த மக்களின் சரியான முறையில் மீள்குடியமர்த்தவும் அவர்களது அடிப்படைத் தேவைகளைக் கவனிப்பதற்கும் தேவையான நிதியுதவியே இது எனவும் இதனை சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் வழங்க வேண்டுமெனவும் செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுள்ளது.
மீள்குடியேறிய மக்கள் தமது ஜீவாதார நடவடிக்கைகளுக்கான தொழிலொன்றை ஆரம்பிப்பதற்கும் உதவிகள் தேவைப்படுவதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.



0 Responses to மீள்குடியேறிய மக்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கம் நிதியுதவி கோருகின்றது