Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருகோண மலையில் கூடி எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயவிருக்கின்றனர்.

கொழும்பில் கூடுவதற்கு முன்னதாக சம்பிரதாய முறைக்கு திருகோணமலையில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 18ஆம் திகதி கூடி ஆராயவுள்ளனராம்.

அதுதொடர்பான விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கூட்டமைப்பு கடைப்பிடிக்க வேண்டிய செயற்பாடுகள், நடவடிக்கைகள் தொடர்பாக எமது பிரதேசத்தில் கூடி ஆராய்வது நல்லது என்று முடிவு செய்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசாங்கத்திடம் இருந்து எதுவித அழைப்பும் நேற்றிரவு வரை தமக்குக் கிடைக்கவில்லை என்றும் சம்பந்தன் மேலும் கூறினார்.

0 Responses to கூட்டமைப்பு திருமலையில் சம்பிரதாயகூட்டம் பின்னர் கொழும்பில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com